தலைமுறை தலைமுறையாய் | Thalaimurai Thalaimuraiyaai Engal

தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானவரே
பூமி உலகம் உருவாகும் முன்னும்
அநாதியான தேவன்

1. வானாதி வானங்களும் கொள்ளக்கூடாத
    வல்லமை மகத்துவமானவரே
    மண்ணான மனிதர்கள் மத்தியிலே
    சொன்னபடி வந்தவர் (2)

2. தகப்பன் தன் பிள்ளைகட்கு இரங்குமாப்போல்
    தமக்கு பயந்தர்வர்க்கு இறங்குகிறார்
    அவர் கிருபை நீதி என்றென்றைக்கும்
    அநாதியாக உள்ளது (2)

3  வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ
    இவ்வேளை கிருபையால் திருப்த்தியாக்கும்
    சிறுமை துன்பம் கண்ட நாட்களுக்கும்
    சரியாய் மகிழ்ச்சியாக்கினீர் (2)

4. அன்பு கூர்ந்து அவர் சத்தம் கீழ்ப்படிந்தால்
    ஆயிரம் தலைமுறைக்கும் தயவளிப்பார்
    உடன்படிக்கையை என்றும் காத்திடுவார்
    உண்மையுள்ள தேவனவரே (2)